புதுடெல்லி: கிரிக்கெட்டில் நிலைப்பெற்று சாதிப்பதற்கு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் தனக்கு பெரிதும் உதவி செய்தனர் என்று கூறியுள்ளார் ரகானே.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் துணைக் கேப்டனாக இருப்பவர் 31 வயதான ரகானே. இவர் ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடப்படுகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னர், கவுதம் கம்பீர் ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடப்பட்டார்.
அவர் பேசியுள்ளதாவது, “இந்திய முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் போன்றவர்கள் எனக்கான முன்மாதிரிகள்.
அவர்களை சிறந்த வீரர்கள் என்று சொல்வதைவிட, நல்ல மனிதர்கள் என்று சொல்வேன். நான் கிரிக்கெட்டில் நின்று சாதிப்பதற்கு அவர்கள் நிறைய உதவிகள் செய்துள்ளனர்.
இவர்களைப் போன்று சிறப்பாக விளையாடுவதற்கு நானும் முயற்சிப்பேன். என்னை ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றுள்ளார் ரகானே.

[youtube-feed feed=1]