இரட்டையர்களை பிரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவரான பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் டி குட்ரிச் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓரிகானைச் சேர்ந்த ஜேம்ஸ் டி குட்ரிச் வியட்நாம் போரின்போது ஒரு மரைனாக பணியாற்றினார் என்று கூறப்படுகிறது. மேலும் வரலாற்று கலைப்பொருட்கள், பயணம் மற்றும் உலாவல் ஆகியவற்றில் அவர் ஆர்வம் கொண்டவர் ர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர்.
இந்த 70ம் ஆண்டுகளில் இருந்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மான்டிஃபியோர் ஐன்ஸ்டீனில் பணியாற்றி வந்தார். ன்டிஃபியோரில் குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவின் இயக்குநராகவும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ நரம்பியல் அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
ஒரே உடலில் இணைந்து பிறக்கும் இரட்டையர்களை பிரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் ஜேம்ஸ் குட்ரிஜ். சிக்கலான நரம்பியல் நிலைமைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு உதவும் துறையில் ஒரு முன்னோடியாக இருந்து வந்தவர், மூளை மற்றும் மண்டை ஓட்டில் இணைந்த ஜடோன் மற்றும் அனியாஸ் மெக்டொனால்ட் போன்ற கிரானியோபாகஸ் இரட்டையர்களைப் பிரிப்பதற்கான பல கட்ட அணுகுமுறையை அவர் உருவாக்கியவர் என்று குட்ரிட் மருத்துவமனை புகழஞ்சலி செலுத்தி உள்ளது.
“டாக்டர் குட்ரிச் எங்கள் நிறுவனத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார், அவரது நிபுணத்துவ மும் திறமையும் அவரது கனிவான இதயத்திற்கும் விதத்திற்கும் அடுத்தபடியாக இருந்தன.”
விளம்பரங்களுக்கு ஆசைப்படாதவர் என்றும், உண்மையிலேயே அக்கறையுள்ள மனிதர் என்று அவருடன் பணியாற்றிய சக மருத்துவர்கள், ஊழிகர்களும் தெரிவித்து உள்ளனர்.
“அவரது திடீர் இழப்பு இதயத்தை உடைக்கும் மற்றும் அவரது நினைவகம் எப்போதும் நம் எண்ணங்களில் முன்னணியில் இருக்கும்.” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் எமட் எஸ்கந்தர் மற்றும் மான்டிஃபியோர் மருத்துவ மையம் இரங்கல் தெரிவித்து உள்ளது.