ஆக்ரா:

தாஜ்மகால் வளாகத்தில் சிவ புராணம் எழுதிய 12 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட வாலிபர்கள் அனைவரும் ராஷ்ட்ர ஸ்வாபிமான் தல் மற்றும் இந்து யுவ வாஹினி அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் கூறுகையில், ‘‘அடிப்படையாக தாஜ்மகால் ஒரு சிவன் கோவிலாகும். அதை சிஐஎஸ்எப் வீரரகள் எடுத்துக் கொண்டுவிட்டனர். தேஜோ மாலயா என்ற சிவன் கோவில் இது. முகலாய மன்னர்களால் தாஜ்மகால் அமைப்பதற்காக கோவில் இடிக்கப்பட்டது’’ என்றனர்.

இதற்கான கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் மன்னிப்பு கோரியதால் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘ நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சிவ புராணம் எழுதியது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என சிஐஎஸ்எப் வீரர்கள் கூறியதால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தோம்.

நாங்கள் உச்சநீதிமன்றத்தை மதிக்கிறோம். எந்த மதத்தினரின் நம்பிக்கையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலில் இந்துக்கள் வழிபட ஏன் அனுமதிக்கப்படுவது கிடையாது’’ என்றனர்.

தாஜ்மகால் சிவன் கோவில் என்று உரிமை கோருவது இது முதன் முறையல்ல. ஏற்கனவே 2014ம் ஆண்டு உபி மாநில பாஜக தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய், தாஜ்மகால் முந்தைய காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது என்று கூறினார். தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆலம் கான் கூறியதை தொடர்ந்து லஷ்மிகாந்த் அந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

மூத்த பாஜக தலைவர் வினய் கத்தியாரும் தாஜ்மகால் சிவன் கோவில் என்று தெரிவித்திருந்தார். அது தேஜோ மகால் என்று அழைக்கப்பட்டது. முகலாய மன்னர் சாஜகான் அதை அழித்துவிட்டு தாஜ்மகாலாக மாற்றிவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.

எனினும் கடந்த 2015ம் ஆண்டு மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘‘தாஜ்மகால் சிவன் கோவில் என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக ‘‘தாஜ்மகால் பாரத் மாதா பிள்ளைகளின் ரத்தம் மற்றம் மகழ்ச்சியால் தாஜ்மகால் உருவாக்கப்பட்டது. அதை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசு வசம் உள்ளது’’ என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்திருந்தார்.

17ம் நூற்றாண்டில் தனது மனைவி மும்தாஜ் நினைவாக முகலாய மன்னர் சாஜகான் தாஜ்மகாலை கட்டினார். இருவரும் அங்கு புதைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.