சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, இன்று காலை முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஏராளமான மாணவ மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு, பிளஸ்2 தேர்வு நடத்தாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 19ந்தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மதிப்பெண் பட்டியல் 22ந்தேதி காலை 11 மணி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை முதல் இணையதளத்தல் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் வெளியானது. மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி பதிவு செய்து மதிப்பெண்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் இணையதள முகவரி:
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in
இந்தாண்டு பிளஸ் 2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முதன்முறையாக தசம எண்களில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டது.