நெட்டிசன்
“பலவிதங்களில் வசூலிக்கப்பட்ட வரிகள், இப்போது ஒரே (ஜி.எஸ்.டி.) வரியாக வசூலிக்கப்படுகிறது.
இது மிக நல்ல சிஸ்டம்” என்றார்கள் பாஜக ஆதரவு அறிவாளிகள். திரையரங்குகளில் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கேளிக்கை வரிகளோடு ஜி.எஸ்.டி. வரியும் சேர்ந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு என்ன விளக்கம் கொடுப்பார்களோ அந்த “ஜிங் ஜாங்” ஆதரவு அறிவாளிகள்?
தவிர, எதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் போராடினார்கள்.. திரையரங்குகளை மூடினார்கள். இப்போது அவர்களுக்கு என்ன உத்திரவாதம் தரப்பட்டு திரையரங்குகளை திறந்தார்கள்?
மொத்தத்தில் படம் பார்க்கும் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைக்கிறது அரசும், திரையரங்க நிர்வாகங்களும்!
(வாட்ஸ்அப் பதிவு)