சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற இரட்டை கொலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 13 பேர் கைது செய்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
சென்னையின் முக்கிய பகுதியான, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் முக்கிய டிவி சேனல்கள் அமைந்துள்ள இடம் கோட்டூர்புரம். இங்கு மார்ச் 16ந்தேதி இரண்டுபேர் 8பேர் கொண்ட ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இது அந்த பகுதி மக்களிடையே பேரும் அதிர்ச்சியை எற்படுத்தியது.
ஏற்கனவே சென்னையில், போதை பொருட்கள் நடமாட்டம் தீவிரமடைந்துள்ளதுடன், பல்வேறு பாலியல் மற்றும் கொலைகளும் தொடர்ந்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் இரட்டை கொலை, அதாவது, அந்த பகுதியைச் சேர்ந்த, ரவுடிகள் அருண் குமார் மற்றும் சுரேஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இது மாநகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து கொலைகளை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார், இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 13 பேரை கைது செய்தள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). இவரின் நண்பர் சுரேஷ் (எ) படப்பை சுரேஷ். இவர்கள் இருவரும் ரௌடிகள். இவர்கள் இருவரும் 16.3.2025 அன்று மது அருந்திவிட்டு, அந்த பகுதியில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் முன்பு போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று அருண், சுரேஷ் ஆகியோரை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியது.
மதுபோதையில் இருவரும் இருந்ததால் அவர்களால் தப்பி ஓட முடியவில்லை. அதனால் சர்வசாதாரணமாக இருவரையும் வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் அருண், ராயப்பேட்டை மருத்துவமனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணை யில் ரௌடி சுக்கு காப்பி சுரேஷ்(25) என்பவர் தலைமையிலான டீமுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த இரட்டை கொலை வழக்கில் ரௌடி சுக்கு காபி சுரேஷ், அவரின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 பேரை காவல்துறை பிடித்து மறைவான இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.