டில்லி:
பொருளாதார சர்வே குறித்து கவலை அடையாமல் மகிழ்ச்சியாக இருங்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தயாரித்த 2018ம் ஆண்டின் பொருளாதார சர்வே அறிக்கையை நாடாளுமன்றதில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பொருளாதார சர்வே முடிவில் இனி எல்லாம் நல்ல நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கீழ்கண்டவைக்கு மட்டும் விலக்கு உண்டு.
அது தொழில் துறை, விவசாய துறை, உள்நாட்டு மொத்த உற்பத்தி, வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆகியவை மட்டும் இறங்கு முகமாக உள்ளது. அதனால் கவலை அடைய வேண்டாம். மகிழ்ச்சியாக இருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.