டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரை அவை தலைவர் சஸ்பெண்டு செய்து வரும் நிலையில், முன்னாள் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கடுமையாக விமர்சித்து உள்ளர். மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உள்பட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் கொந்தளித்து டிவிட் போட்டுள்ளார். அதில், ‘பாராளுமன்ற ஜனநாயகத்தில்.. மக்கள் பிரச்சினைகளுக்காக, அரசின் தவறுகளை கண்டிக்க, அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்த, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிவாரணம் கேட்க, மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா?