என் கல்வித்தகுதியை சொல்லாதீங்க! ஸ்மிருதி இராணி கதறல்…!!

Must read

டில்லி,

னது கல்வித்தகுதி குறித்த தகவலை தெரிவிக்க வேண்டாமென மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி கூறியுள்ளதாக டில்லி பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தன் கல்வித் தகுதி பற்றிய தகவலை, தெரிவிக்க வேண்டா மென, மத்திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இராணி கேட்டதாக டில்லி பல்கலையின் அங்கமான, ‘ஸ்கூல் ஆப் ஓபன் லேர்னிங்’ கல்வி மையம் கூறியுள்ளது.

பாரதியஜனதா கட்சியை சேர்ந்த  மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இரானி, ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது கல்வி தகுதி பற்றி தவறான தகவல் கொடுத்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

எதிர்க்கட்சியினரும் அவரது கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பினர்.

கடந்த 2004, 2011 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களின்போது, வேட்பு மனுவுடன் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் அவரது கல்விதகுதி குறித்து  முரண்பட்ட தகவல்கள் கூறியுள்ளதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அவரது கல்விதகுதி குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சட்ட வல்லுநர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

ஆனால், அதற்கு கல்விதகுதி குறித்த தகவலை தெரிவிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ள தாக டில்லி பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. டில்லி பல்கலைக்கழகத்தின் ‘ஸ்கூல் ஆப் ஓபன் லேர்னிங்’ கல்வி மையம் அளித்த பதிலில்,

‘தன் கல்வித் தகுதி பற்றிய தகவலை, தெரிவிக்க வேண்டாமென, ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார். எனவே, மனுதாரர் கேட்டுள்ள, ஸ்மிருதி இரானி குறித்த தகவலை அளிக்க இயலாது’ என  கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தகவல் அளிக்க முடியாததற்கு விளக்கம் அளிக்கும்படி, டில்லி பல்கலையின் பொது தகவல் அதிகாரிக்கு, மத்திய தகவல் கமிஷன், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article