இளைஞர்களும் இந்திய வாக்காளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மோடி தனது நாடகத்தை அரங்கேற்ற தயாராகி வருவதாகவும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட காணொலியில், பிரதமர் மோடியின் வித்தைகள் எதுவும் மக்களிடம் எடுபடாமல் போனதை அடுத்து தோல்வி பயம் கவ்விக் கொண்ட நிலையில் அடுத்து என்ன நாடகத்தை அரங்கேற்றுவது என்ற மனநிலையில் மோடி உள்ளதாக கூறியுள்ளார்.

“தேர்தலில் தனது தோல்வி உறுதி
என்பதை மோடி உணர்ந்துவிட்டார்.

இந்தியாவின் பிரதமராக
தான் தொடரப்போவதில்லை
என்பதை அவர் புரிந்துகொண்டுவிட்டார்.

எனவே அடுத்த நான்கைந்து நாட்களுக்குள்
பெரிய நாடகங்களை நடத்த
அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், அவரது நாடகங்களை நம்புவதற்கு
யாருமே தயாராக இல்லை.

நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை
வேலையின்மை.

இளைஞர்களுக்கு ஆண்டுதோறும்
இரண்டு கோடி வேலை வாய்ப்பு தருவதாக
நரேந்திர மோடி வாக்குறுதி கொடுத்தார். வாக்குறுதியை நிறைவேற்றாமல்
அவர் நம் இளைஞர்களை ஏமாற்றினார்.

நாட்டு மக்களை அல்லல்பட வைப்பதற்காகவே
பணமதிப்பிழப்பு மற்றும் அநியாய ஜிஎஸ்டியை
மோடி அமல்படுத்தினார்,

அதானி போன்ற
பெரும் கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே
மோடி அனைத்து வேலைகளையும் செய்தார்
என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

நாட்டின் இளைஞர்களுக்கு
நான் வாக்குறுதி தருகிறேன்.
ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுக்குப் பின்
இந்தியா கூட்டணி
ஆட்சி அமைக்கப் போகிறது.

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள்
காலியாக உள்ள 30 லட்சம்
மத்திய அரசுப் பணியிடங்களுக்கான
ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்குவோம்.
இது எங்கள் உத்தரவாதம்.

நரேந்திர மோடியின் நாடகங்களிலும்
திசை திருப்பும் பொய்ப் பிரச்சாரத்திலும்
ஏமாந்துவிடாதீர்கள்.

உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று
இந்தியா கூட்டணி சொல்வதைக் கேளுங்கள்.

வேலைகளைத் தேர்ந்தெடுங்கள்,
வெறுப்பு அரசியலை விரட்டுங்கள்.

இந்தியாவின் உண்மையான பலம்,
நம் நாட்டின் இளைஞர்கள்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்