டில்லி,

விஜய்மல்லையா லோன் குறித்து மத்திய தகவல் ஆணையம் கேட்ட கேள்விக்கு, நிதி அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பதில், ‘விஜய் மல்லையா லோன் தொடர்பான ஆவனங்கள் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறு மத்திய நிதி அமைச்சகத்திற்கு தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் கடிதம் அனுப்பியிருந்தார்.  அதில் விஜய்மல்லையா லோன் குறித்த தகவல் தெரிவிக்கும்படி கோரியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சகம், மல்லையா வாங்கிய கடன் தொடர்பான எந்த ஆவணமும் இல்லை என தெரிவித்துள்ளது.

ற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ந்தேதி  பாராளுமன்றத்தில் விஜய் மல்லையா லோன் குறித்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த,  மாநிலங்களுக்கான மத்திய நிதி இணை அமைச்ச்ர சந்தோஷ் கங்காவர்,

2004ம் ஆண்டு மல்லையா பெயரிடப்பட்ட நபருக்கு கடன் வழங்கப்பட்டது என்றும், அதுகுறித்து பிப்ரவரி மாதம் பரிசீலனை செய்யப்பட்டது என்றும் கூறினார். 2009 ல் ரூ. 8,040 கோடி கடன் அல்லாத ஒரு சொத்து அறிவிக்கப்பட்டது (NPA) மற்றும் NPA 2010 ல் மறுசீரமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

மேலும், ராஜ்யசபாபில் மார்ச் 21ந்தேதி அன்று உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது,  பி.எஸ்.பி வங்கிகளால் அறிவிக்கப்பட்டபடி, கடனாளிகளின் கடன் வாங்குபவர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை  விற்பனை செய்ததன் காரணமாக  155 கோடி ரூபாயை மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

அதுபோல மத்திய நிதிஅமைச்சர்  அருண் ஜேட்லியும், நவம்பர் 17, 2016 அன்று நடைபெற்ற  பாராளுமன்ற விவாதத்தின்போது, மல்லையாவின் கடன் பிரச்சினை குறித்து விரைவில் முடிவு எடுக்க இருப்பதாகவும், இந்த பிரச்சினை, முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலேயே உள்ளது என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதி அமைச்சர்கள் பாராளுமன்றத்திலேயே விஜய் மல்லையாவின் லோன் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், நிதி அமைச்சகமோ எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று தகவல் ஆணையத்துக்கு தெரிவித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.