உரி தாக்குதலையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும் மக்கள் போர் பதற்றத்தில் உள்ளனர். போரை தவிர்க்கும்படி அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் 553 கிலோமீட்டர் சர்வதேச எல்லையை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த எல்லையில் 1,871 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமவாசிகள் ஏற்கனவே 1965, 1971 மற்றும் 1999 ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே மூண்ட மூன்று போர்களின் விளைவாக ஏற்பட்ட காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்.

border1

முன்பெல்லால் எங்கள் கிராமத்தில் தூர்தர்ஷன் மட்டும்தான் இருக்கும். இப்போது பல சேனல்களை நாங்கள் பார்க்கிறோம். உரி தாக்குதலையொட்டி பாகிஸ்தான் மீது ராணுவ நடைவடிக்கை எடுக்கும்படி பலரும் கொதிக்கிறார்கள். போரை தொடங்கும்படி சில சேனல்களே ஊக்கப்படுத்துகின்றன. அவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் போர் ஏற்படுத்தும் வலி எங்களுக்குத்தான் தெரியும் என்று கொதிக்கிறார்கள் கிராமவாசிகள்.
இப்பகுதி கிராமவாசிகள் தங்களுக்கு பெரிய வீடுகள்கூட கட்டிக்கொள்வதில்லை. வெறும் மண் வீடுகளே கட்டிக்கொண்டு அதில் குடியிருக்கிறார்கள். 1965 போரின்போது 35 கிராமங்களுக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுறுவி கையில் கிடைத்ததையெல்லாம் கொள்ளையடித்து சென்றுவிட்டனராம்.
அப்பகுதி எம்.எல்.ஏ விர்சா சிங் என்பவர் சொன்ன கருத்து இன்னும் ஆழமானது. போர்களே எதிரிகளின் ஊடுருவல்களால்தானே ஏற்படுகிறது. நீங்கள் போருக்கு பயன்படுத்தும் பல்லாயிரம் கோடிகளை ஏன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்லைகளை பலப்படுத்த செலவழிக்கக்கூடாது என்று கேட்கிறார். இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த சூழலில் மலைகளின் மீது கூட நவீன எல்லைகள் அமைப்பது சாத்தியம் என்கிறார்.
Courtesy: The Indian Express and Photo by Rana Simranjit Singh