டெல்லி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 4 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ள. நீதித்துறை மோசமாகி வருகிறது. நீதித்துறைக்கு அதிகாரிகளை நியமனம் செய்வது போல் நீதிபதிகளை நியமனம் செய்யாதீங்க என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் அறிவுறுத்தி உள்ளார்.
தனியார் ஊடகம் நிகழ்ச்சி நடத்திய கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் பேசுகையில், நீங்கள் நீதிமன்றத்துக்கு சென்றால், உங்களுக்கு தீர்ப்பு கிடைக்காது. நீங்கள் செய்வது உங்கள் அழுக்கு துணியை துவைக்க வேண்டும்.
2020ம் ஆண்டில் நம் நாட்டின் துணை நீதிமன்றங்களில் சுமார் 60 லட்சம் புதிய வழக்குகள் சேர்ந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நீதித்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் 4 கோடியை நெருங்கி உள்ளது. உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு 7 ஆயிரம் புதிய வழக்குகளை ஒப்புக்கொண்டுள்ளது. துணை நீதிமன்றங்களில் சுமார் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் 44 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும், உச்ச நீதிமன்றத்திலும் சுமார் 60,000 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
அரசியலமைப்பு அமைப்பாக நீதித்துறை எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை. அனைவருக்கும் தெரிந்ததுதான். நீங்கள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை விரும்புகிறீர்கள். ஆனால் உங்கள் நீதித்துறை மோசமாக உள்ளது. இந்தியாவின் நீதி வழங்கல் முறையின் செயல்திறனை மேம்படுத்த ஒரு திட்டத்துடன் நீதித்துறை வர வேண்டும் என காட்டமாக விமர்சித்தார்.
இதை தீர்க்க என் மனதில் ஒரு திட்டம் உள்ளது. அதாவது, ஒரு வேலைக்கு சரியான நபர் என அரசு பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பதுபோல, நீங்கள் நீதிபதிகளையும் நியமிக்காதீர்கள். நீதிமன்றம் தீர்ப்பளிப்பது ஒரு முழு நேர அர்ப்பணிப்பு. இது ஒரு உணர்வு. அதற்கு பணி காலம் வரையறை இல்லை. இநத பணியானது 24 மணி வேலை .
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு 62 அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 32 நீதிபதிகளைக் கொண்டுள்ளது, மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அதன் அனுமதிக்கப்பட்ட பலத்தில் 40 சதவீதம் மட்டுமே உள்ளது, இதுபோன்று நீதிபதிகள் நியமனம் செய்யப்படாமல் இருக்கும்போது, வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இது சமாளிக்கப்பட வேண்டும், ஒரு நீதிபதியை நியமிக்கும்போது, அவருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நீதிபதியாக இருப்பது தேசத்திற்கு ஒரு கடமை என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும்”
போபாலில் உள்ள நீதித்துறை அகாடமியை கடுமையாக விமர்சித்த கோகோய், அகாடமி நெறிமுறைகள் அல்லது தீர்ப்புகளை எவ்வாறு எழுதுவது என்பது பற்றி எதுவும் கற்பிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் நீதித்துறை அமைப்பின் செயல்திறனுக்கு தீவிர மறுபரிசீலனை தேவை என்று வலியுறுத்தியவர், “இது சாலை வரைபடம் அல்ல. இது தொடர்பாக, எனது சகோதர நீதிபதிகள் ஒரு வரைபடத்தை வரையுமாறு அழைக்கிறேன். இது கடினம் அல்ல, ஆனால் அதற்கு நேரம் தேவை. அமைப்பின் செயல்திறனுக்கு தீவிர மறுபரிசீலனை தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.