நியூயார்க்:

ந்திய அதிகமான வரி விதிக்கும் நாடு என்று குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்,  வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மோடி தலைமையிலான ஆட்சியில், அனைத்து வகையான பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டு, வரிச்சுமை கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பொருட்களுக்கும் அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் 100% வரி விதிக்கப்பட்டது.

இதுபோன்ற செயல்களை கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு அமெரிக்க எந்த வரியும் விதிப்பதில்லை என்று குறை கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கான வரியை  50% ஆக இந்தியா குறைத்தது; இந்த வரி குறைப்பு போதுமானதாக இல்லை  என்றும் டிரம்ப்,  இந்தியா உச்ச பட்ச வரி விதிக்கும் நாடாக உள்ளது என்றும் கூறி உள்ளார். இதன் காரணமாக,  இந்தியா மற்றும் துருக்கியை வளர்ந்து வரும் நாடுகளுக்கான முன்னுரிமை பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று உலக வர்த்தக தலைமை அலுவலகத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்.

அமெரிக்க அதிபரின் அறிவுறுத்தலை bதாடர்ந்து, அமெரிக்க வர்த்தகத் தலைமை அலுவலகம்  இந்தியாவிற்கும், துருக்கிக்கும்  வழங்கப்பட்டு வந்த  வர்த்தக முன்னுரிமை நிலையை அகற்ற விரும்புவதாக தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா உலகில் சில முக்கிய நட்பு நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள் (Generalized System of Preferences – GSP) என்று பட்டியலில் வைத்து இருக்கிறது. இதில் இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இருப்பதன் மூலம் இந்தியா 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியும்.

உலகில் GSP மூலம் அதிக பலன் பெறும் நாடு இந்தியாதான். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கும் அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் சுமார் 5 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கான வரிச்சலுகைகள் ரத்தாக கூடும். இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது மோசமாக வரி விதிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.