வாஷிங்டன்:

அமெரிக்காவில் ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் கூட்டு ராணுவ பயிற்சி நடத்த அதிபர் டொனால் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இந்த நாடுகளில் பலத்தை எடுத்துக் கூறும் வகையில் இந்த பயிற்சி நடக்க வேண்டும் ªன்ற கருத்தை அவர் அதிபராக பதவி ஏற்பதற்கு முன்பிருந்தே தெரிவித்து வருகிறார். இந்த கருத்தை அவர் அந்தந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது தலைவர்களிடமும் தெரிவித்துள்ளார். இதற்கான தேதியை தேர்வு செய்யும் பணி தீவிரமாக வெள்ளை மாளிகையில் தீவிரமாக நடந்து வருகிறது.

அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நவம்பர் 11, ராணுவ வீரர்களின் நினைவு தினமான மே 28 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு தினத்தை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உலகிலேயே ராணுவத்துக்கு அதிக செலவிடும் 19 நாடுகளை விட கூடுதலாக அமெரிக்கா செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.