வாஷிங்டன்

ட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

வட கொரியா ஏவுகணை சோதனை செய்து வருவதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  ஆனால் வட கொரியா தொடர்ந்து தனது சோதனைகளை நடத்தி வருகிறது.   சமீபத்தில் வட கொரியாவின் செயலுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என அமெரிக்க அரசு தெரிவித்தது.

அதற்கு வட கொரியா, “அமெரிக்கா எங்கள் மீது போர் பிரகடனம் செய்துள்ளது.  அதனால் அமெரிக்க போர் விமானங்கள் எங்கள் நாட்டு எல்லைக்குள் பறந்தாலும் அல்லது எங்கு பறந்தாலும் அதை நாங்கள் சுட்டு வீழ்த்தும் உரிமை உள்ளது.” என கூறியது.

அதற்கு பதில் அளிக்கும் வகையில், நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பத்திரிகையாளர்கள்  சந்திப்பில், “வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளோம்.   இது வரை நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தில் இல்லை.  ஆனால் நாங்கள் ஒரு வேளை ராணுவ நட்வடிக்கை எடுத்தால் அது வட கொரியாவுக்கு பேரழிவை உண்டாக்கும் ” என கடுமையாக எச்சரித்தார்.