கலிபோர்னியா: 2020ம் ஆண்டு ட்விட்டரில் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களில் டிரம்ப், பிடன் முறையே முதல் 2 இடங்களை பிடித்து உள்ளனர்.

நடப்பு ஆண்டில் ட்விட்டரில் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்கள்  குறித்த பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் குறித்து மக்கள் அதிகம் ட்வீட் செய்துள்ளனர்.

அவருக்கு அடுத்து, அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார். மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு 7 ம் இடம் கிடைத்து உள்ளது.

அமெரிக்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் பட்டியலில் உள்ள ஒரே பெண் ஆவார். அவர் 10ம் இடத்தைப் பெற்றுள்ளார். அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளார்.

இது தவிர இந்த ஆண்டு மக்கள் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான ஹேஷ்டேக்காக கோவிட் 19  இருந்துள்ளது. 2வதாக அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை குறித்து அதிகம் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.