வாஷிங்டன்:
சீனா அல்லது கொரோனா வைரஸ் தொற்று நோய் போல அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கவில்லை, ஆனால் அமெரிக்க தேர்தலின் முடிவு இந்தியா அமெரிக்கா உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சியை சார்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரின் தனிப்பட்ட தோழமை உறவு தொடரும், மேலும் வர்த்தகத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நல்ல பலன் கிடைக்கும், ஆனால் ஜோபிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இதற்கு வாய்ப்புகள் குறைவே.

ஆனால் எவ்வாறாயினும் ஜனநாயக கட்சியின் அதிபர்களான பில் கிளின்டன் மற்றும் பாரக் ஒபாமா ஆகியோருடனும், குடியரசு கட்சியை சார்ந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருடனும் கூட இந்திய-அமெரிக்க உறவுகள் நன்றாகவே வளர்ந்தன.

இந்த உறவுகள் இந்தியாவுக்கு மட்டும் பலனளிக்காமல் இருநாடுகளுக்கும் சேர்ந்தே பலன் அளித்து வந்தது, ஏனெனில் சீனாவுக்கு பிறகு உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே, ஆகையால் இது அமெரிக்காவிற்கும் வர்த்தகத்தில் நல்ல பலனை அளித்துள்ளது.

இந்திய தலைவர்களை பொருத்தவரை பிற நாடுகள் உடனான தொடர்புகள் பயனுள்ள பரிவர்த்தனைகளாக இருக்கலாம், ஆனால் கடந்த முறை டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு வந்தபோது பயனுள்ளதாக எதுவும் நடக்கவில்லை.

குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இரு கட்சியின் ஆட்சியாளர்களுடனும், அமெரிக்காவுடனும் இந்தியாவிற்கு ஒரு நல்ல தோழமை இருந்துவந்துள்ளது. இது இரு நாட்டிற்குமே பலனளிக்கும் வகையில் இருந்தது, ஆனால் இனி வரும் காலங்களில் அது எவ்வாறு மாறும் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.