அகர்தலா:
திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் வீட்டில் தன்னை துன்புறுத்துகிறார் என்று குற்றம் சாட்டி உள்ள அவரது மனைவி, அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை நாட்டி உள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பிப்லாப் தேப் உள்ளார். இவருக்கும், அவரது மனைவி நிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் முற்றி வருகிறது. இந்தநிலையில், விவக ரத்து கேட்டு நிதி நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

சர்ச்சைக்கு பேர்போனவர் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப். ஏற்கனவே, எனது அரசின் செயல் பாட்டில் யார் தலையிட்டாலும் அவர்களின் விரலை இழுத்துவைத்து வெட்டுவேன் என்றும், அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை வைக்க வேண்டும் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
தற்போது, அவரது குடும்பத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. அவரது மனைவி நிதி, பிர்லாப் தேப் மீது குற்றம் சாட்டி உள்ளார். அவர் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், வன்முறையில் ஈடுபடுவ தாகவும் குற்றம்சாட்டி, தனதுக்கு அவரிடம் இருந்த விவாகரத்து பெற்றுத் தரும்படியும் டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]