லண்டன்:
தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் எட்டு பேர், நாய்களிடம் பரவும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் தொற்று நோய் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் கிரிகோரிகிரே கூறியுள்ளதாவது: மலேஷியாவில் நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது புதிதல்ல. மாணவர்களுடன் இணைந்து, ஒரு சோதனை கருவியை உருவாக்கினேன். எந்த வைரசையும் இந்த கருவி வழியாக கண்டறிய முடியும்.

இந்த கருவியின் உதவியுடன் மலேஷியாவின் சர்வேக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில், நாயிடம் இருந்து, அவர்களுக்கு தொற்று பரவியுள்ளது தெரிந்தது. எங்களது குழு பரிசோதித்த, 301 மாதிரிகள், அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தின் பிரபல தொற்று நோய் ஆராய்ச்சியாளர் அனஸ்தேசியா விளாசோவாவுக்கு அனுப்பப்பட்டன.

அவர் கூறுகையில், ‘நாய்கள் வாயிலாக பெரிய அளவில் கோவிவ் வைரஸ் பரவாது. அப்படியே பரவினாலும், மனிதர்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.