புதுடெல்லி:

பிரதமர் மோடி கொண்டுவந்த சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைக்குரிய 5 சட்ட திருத்தங்கள் அமைச்சர்கள் எதிர்த்த விவரம் வெளியாகியுள்ளது.


பிரதமர் மோடி கொண்டு வந்த சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைக்குரிய 5 சட்ட திருத்தங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இதில் 4 சட்டதிருத்தங்கள் சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் பாதுகாப்புக்க எதிரானதாக உள்ளன. ஒரு சட்டதிருத்தம் நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்காக உள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதி பிரதமர் மோடி இந்த சட்டதிருத்தங்கள் குறித்து அரசு நிகழ்ச்சியில் அறிவித்தார்.

குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த சட்டதிருத்தங்கள் இருக்கும் என்றும், இந்த சட்டதிருத்தங்கள் தமது தீபாவளி பரிசு என்றும் பிரதமர் மோடி பெருமைபட குறிப்பிட்டார்.

ஆனால், இந்த சட்டதிருத்தங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தால் இந்த ஆண்டு தொடக்த்தில் தடை விதிக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி 12-ம் தேதி பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்பேரில், நகர மேம்பாடு மற்றும் மற்ற அமைச்சகங்கள் புதிய கட்டிட துணை விதிகளையும், சுற்றுச்சூழல் சான்று அளிப்பதற்கான விதிகளையும் மாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டன.

இது தொடர்பாக கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிவிக்கைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் அரசு ஆவணங்களைப் பார்க்கும்போது, அதேபோன்று 2 அறிவிக்கைகளில் சிறு மாற்றம் செய்து கடந்த 2018 நவம்பரில் மத்திய அரசு வெளியிட்டது.

டெல்லி உயர்நீதிமன்றம் தடை செய்த சட்ட திருத்தத்தில் சிறு மாற்றம் செய்து, 15 நாட்களில் மீண்டும் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு பிரதமர் மோடியே நேரடியாக உத்தரவிட்டுள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரச்சினைக்குரிய சட்டதிருத்தங்களை ஜவடேகர் எதிர்த்துள்ளார்.

மேலும், பெரிய அளவிலான கட்டிட கட்டுமானத்துக்கு உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கும் பிரதமரின் சர்ச்சைக்குரிய சட்ட திருத்தத்துக்கு, அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மத்திய அரசு சிறு முயற்சிகூட செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
நீதிமன்றம், நிர்வாகம், தீர்ப்பாயம் முடிவுகளை மீறி பிரச்சினைக்குரிய சுற்றுச்சூழல் சட்ட திருத்தங்களை கொண்டு வர பிரதமர் மோடி முனைப்பு காட்டியுள்ளது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.