சென்னையில் ஏழு வயது சிறுவனுக்கு 526 பற்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஏழு வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அச்சிறுவனிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கீழ்தாடையில் 4×3 என்கிற அளவில் கட்டி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த கட்டியை நீக்குவதற்காக அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
இச்சிகிச்சையின் போது அகற்றப்பட்ட கட்டிக்குள் நூற்றுக்கணக்கான பற்கள் இருந்தது. இதைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த கட்டிக்குள் மொத்தம் 526 பற்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel