போபல்:

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலைவிரித்து ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வரும் பாதிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆக உள்ளது.   இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இந்தூர் பகுதி சேரி மக்களிடையே  கொரோனா தொற்று குறித்து சோதனை மேற்கொண்டு வந்த மருத்துவர் சத்ருகன் பன்ஞ்சாவானி  கொரோனா பாதிப்பால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததுள்ளார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்புதான்  மருத்துவர் சத்ருகன் பன்ஞ்சாவானிக்கு  (Shatrughan Panjwani ) நோய் தொற்று உறுதியான நிலையில்,  இந்தூரில் உள்ள ஸ்ரீஅரவிந்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டார். இருந்தாலும், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் பஞ்ச்வாணி உயிரிழந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.  மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 213 ஆக உள்ளது.

மரணம் அடைந்த மருத்துவர் மருத்துவர் சத்ருகன் பன்ஞ்சாவானிக்கு (வயது 62)  மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்தூரில் இதுவரை மொத்தம் 22 பேர் இறந்துள்ளனர்.

மருத்துவர் சத்ருகன் பன்ஞ்சாவானி, அந்த பகுதியில் உள்ள சேரி மக்களுக்காக பணியாற்றி வந்ததாகவும், கடந்த சில நாட்களாக அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டு வந்ததாகவும், இதனால், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்து உள்ளதாக அவரது நண்பர் டாக்டர் நட்வார் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில், இந்த நகரங்களிலிருந்தும் இந்த நகரங்களிலிருந்தும் தொற்று பரவுவதை சரிபார்க்க மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங், இந்தூர், போபால் மற்றும் உஜ்ஜைன் ஆகிய கொரோனா வைரஸ் வெடிப்பின் ஹாட்ஸ்பாட்களை சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்.