சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார். அவரது மறைவுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள்,  பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்ககம் செய்யப்படும என முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா  வயது முதிர்வு காரணமாக,  உடல்நலக்குறைவால் அப்போலோவின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் மருத்துவர் சாந்தா.சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 67 ஆண்டுகளாக பணியாற்றியவர் மருத்துவர் சாந்தா. அவரது உயிரிழப்பு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 68 ஆண்டுகளாக மருத்துவ சேவையில் அயராது பணியாற்றி வந்த மருத்துவர் சாந்தா, புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக 20 ஆண்டுகளாக பொறுப்பு வகித்தார். தற்போது 93 வயதாகும் அவர் பெற்று வந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

‘சாந்தாவின் உடலுக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மருத்துவர் சாந்தா அவர்களை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திகிறேன்.

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த மருத்துவர் சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையினை கவுரவிக்கும் விதமாகவும், அன்னாரின் இறுதிச்சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் ய்ய நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்மபூஷன் டாக்டர். வி.சாந்தா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர். பல ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவ சேவை ஆற்றிவந்த டாக்டர்.சாந்தா அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “புற்றுநோய் மருத்துவத்தில் அனைத்து இந்திய அளவில் முன்னோடிகளில் முதன்மையானவரும், தமிழக மகளிருக்குப் பெருமை சேர்த்தவருமான மருத்துவர் சாந்தா அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 1954 ஆம் ஆண்டு நிறுவப் பெற்ற அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில், 1955 ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவராக சேர்ந்த மருத்துவர் சாந்தா, கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பு வகித்து வரலாறு படைத்து இருக்கின்றார்.