டிரம்பின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் என்ன என்பது தெரியுமா?

Must read

நெட்டிசன்:

Neander Selvan என்பவரின் முகநூல் பதிவு

திபர் டொனால்ட் டிரம்பின் மருத்துவ பரிசோதனை ரிசல்டுகள் இன்று வெளியாகின.

வெள்ளைமாளிகையில் உலகின் தலைசிறந்த சமையல்காரர்கள் இருப்பினும், உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பினும், அதிபர் டிரம்ப்பின் டயட் மருத்துவர்கள் அனைவரையும் பதறவைக்க கூடியது.

ஆம். அவரது காலை உணவு பேகன் எனும் பன்றி வறுவல் மற்றும் கணக்கு வழக்கு இல்லாமல் முட்டைகள்.

மதியம் வெள்ளை மாளிகையில் ஸ்டேக் சாப்பிடுவார். அதிலும் கணக்கு வழக்கு எல்லாம் கிடையாது. மாலை மெக்டாலட்ன்ஸ்டில் இருக்கும் டபிள் க்வார்ட்டர் பவுண்டர் பர்கர் இரண்டை வெட்டி ஒரு மில்க்ஷேக்கை உள்ளே தள்ளுவார். பர்கரில் மட்டும் சுமார் அரை கிலோ மாட்டிறைச்சி இருக்கும்.

இதுபோக தினம் 20 டயட் கோக் குடிப்பார்.

அவரது டயட்டை மாற்ற மருத்துவர்கள் முயன்றாலும் டிரம்ப் பிடியே கொடுக்கவில்லை. அவர் பழையகால அமெரிக்கர். நினைத்ததை உண்பார். கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது. தன் அக்கா சமைக்கும் மீட்லோஃப் எனும் உணவு அவருக்கு மிக பிடித்தது. சொந்தமாக மாட்டிறைச்சி கம்பனி நடத்தி வந்ததால் ஸ்டேக்கை இஷ்டத்துக்கு வெட்டுவார்.

தன் தம்பி சிறுவயதில் மதுவால் இறந்ததால் இதுநாள்வரை அவர் மதுவை தொட்டது இல்லை. புகை பிடிப்பது இல்லை.

இதே இதற்குமுன் அதிபராக இருந்த ஒபாமா மிக ஒல்லியாக இருப்பார். ஆனால் வெளியே தெரியாத விசயம் என்னவெனில் அவர் செயின் ஸ்மோக்கர் என்பது. சரக்கு உண்டு. ஆனால் அவரது மனைவி உடல்நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். பள்ளிகளில் மாணவர்களுக்கு கொழுப்பு நீக்கிய பால், சாலட் என கொடுத்தவர். அதை மாணவர்கள் தின்ன முடியாமல் குப்பை தொட்டியில் வீசும் காட்சிகள் வைரல் ஆனது.

ஒபாமாவுக்கு ஸ்டேக் (மாட்டிறைச்சி) என்றால் மிகப்பிடிக்கும். ஆனால் அவரது மனைவி அவர் ஸ்டேக்கை உண்பதை கண்டால் அவரை பின்னி எடுத்துவிடுவார் என்ற அச்சத்தால் கொழுப்பு குறைவாக இருக்கும் வான்கோழி, சிக்கன் பர்கர்களை தான் உண்டுவந்தார். ஸ்னாக் ஆக ஆப்பிள்களை உண்பார். மிஷல் மிரட்டியதால் சிகரெட்டை விடுவது போல நடித்தாலும், ரகசியமாக சிகரெட் பிடித்து வந்ததாகவே தெரிகிறது.

ஆக டிரம்ப்பின் உணவு ஆரோக்கியமற்றது எனவும் ஒபாமா மிக ஆரோக்கியமானவர் எனவும் பத்திரிக்கையாளர்கள் நம்பினார்கள்.

ஆனால் இன்று டிரம்பின் மருத்துவபரிசோதனை எண்கள் வெளியாகின

அவரது கொலஸ்டிரால் 220

நல்ல கொலஸ்டிரால் எச்டிஎல் 61

டிரைகிளிசரைடு 61 மட்டுமே

பாஸ்டிங் சுகர் 99

இதயத்தில் அடைப்புகள் சுத்தமாக இல்லை

கிட்னி, லிவர், தைய்ராய்டு நன்றாக இயங்குகிறது

அனைத்து வகை கான்சர் எண்களும் நெகடிவ். கான்சர் சுத்தமாக இல்லை

பரிசோதனை முடிவில் “இதுநாள் வரை தேர்ந்தெடுக்கபட்டவர்களில் சிறந்த உடல்நலம் கொண்ட ஜனாதிபதி டிரம்ப் தான்” என சொல்ல நிருபர்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள்.

“அவருக்கு கொலஸ்டிரால் 20 பாயிண்ட் அதிகமா இருக்கு. எப்படி அவரை ஆரோக்கியமானர் என சொல்கிறீர்கள்?” என கேட்டு ஒரு நிருபர் பேரத்ரிச்சியுடன் கேள்விகளை கேட்டார்.

நமக்கு இதில் வியப்பு எதுவுமே இல்லை.

டொனால்ட் டிரம்ப்பின் டயட் வழக்கமான அமெரிக்க காமென்மேன் டயட் தான். ஆனால் அதில் மதுவும், புகையும் இல்லை என்பது மிக, மிக பாஸிடிவான விசயம். இதுவே அவரது ஆயுளில் ஒரு 20 – 30 ஆண்டுகளை கூட்டியுள்ளது

அதுபோக அவரது உணவில் கணக்கு வழக்கின்றி இருக்கும் இறைச்சி. மெக்டொனால்ட்ஸ் பர்கர்களை உண்டாலும் அதில் இருப்பது சுத்தமான மாட்டிறைச்சியே. ரிபைன்ட் ஆயில்கள் அதில் இல்லை.

டிரம்ப்பின் மரபணுவும் மிக ஆரோக்கியமானது. அவரது தந்தை 93 வயது வரை வாழ்ந்தவர், தாயின் வயது 88 இறக்கையில்

ஆக அவரது உணவில் இருக்கும் முட்டையும், இறைச்சியும் அவரது எச்டிஎல்லை கூட்டி அவரை மிக ஆரோக்கியமாக வைத்துள்ளன என்றே கருதுகிறேன். டயட் கோக் மாதிரி குப்பைகளையும், மிக் ஷேக், இனிப்புகளையும் தாண்டி அவையும் மரபணுவும் சேர்ந்து அவரை காப்பாற்றியுள்ளன.

ஆனால் இது புரியாமல் “மெடிக்கல் மிரகிள்” என அவரது மருத்துவரும், பத்திரிக்கையாளர்களும் சொல்லி வருகிறார்கள்

More articles

Latest article