ராஞ்சி: பாகிஸ்தானின் பலாகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளன என்று அம்மாநில பாரதீய ஜனதா தலைவர் லக்ஷமன் கிலுயா கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சில நாட்களுக்கு முன்னதாக, “இந்த விமானப்படை தாக்குதல், கர்நாடகாவில் எங்கள் கட்சி 22 நாடாளுமன்ற இடங்களை வெல்ல உதவும்” என்று தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது, இதேபோன்றதொரு கருத்தை, ஜார்க்கண்ட் மாநில பாரதீய ஜனதா தலைவரும் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, “பாரதீய ஜனதாவின் நோக்கம் மிகவும் ஆபத்தானது” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

– மதுரை மாயாண்டி