சென்னை:

மிழக சட்டப்பேரவை மானியக்கூட்டத்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூற வேண்டும் என்று பேசினார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார். மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன் காரணமாக ஓபிஎஸ்-ஐ ஜல்லிக்கடடு நாயகன் என்று அவரது ஆதரவாளர்கள் அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசும்போது ஓபிஎஸ்-ஐ ஜல்லிக்கட்டு நாயகன் என புகழாரம் சூட்டினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம் ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும்  என்று நகைச்சுவையாக பேசினார்.