சென்னை:
டந்த பிப்ரவரி மாதம் 21ந்தேதி  மதுரை ஒத்தக்கடையில்  தனது அரசியல் பிரகடன பொதுக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தனத கட்சியின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தார். அத்துடன்  இணைந்த கைகள் கொண்ட சின்னம் பொறித்த கட்சி கொடியையும் கமல்ஹாசன் ஏற்றினார்.

அதைத்தொடர்ந்துமக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார். அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ் புக் பக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில்,  மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக சேர எந்த வரைமுறையும் இல்லை, யார் வேண்டுமானாலும் கட்சியின் உறுப்பினராக சேரலாம்  என அக்கட்சியின் உயர் மட்டக்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.

மேலும், கிராம சபை என்ற ஒன்று இருக்கிறது என்பதையே மக்களுக்கு தெரியப்படுத்தியது கமல்ஹாசன் தான் எனக் கூறிய ஸ்ரீபிரியா தொடர்ந்து சமூகத்தில் மறைந்து இருக்கும் பல நல்ல விஷயங்களை மக்கள் நீதி மய்யம் தட்டி எழுப்பும் என்றார்.