சென்னை:
வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், முதல்வர் நலமோடு இருக்கிறார் என்று சொல்கிறார் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வளர்மதி.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22-ந் தேதி ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிய தினமும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
அதே போல் இன்றும் ஏராளமான பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.
இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க செய்தி தொடர் பாளருமான வளர்மதியை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்வர், அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப ஓய்வு எடுத்து வருகிறார். அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார்.
ஆஸ்பத்திரியில் இருந்த படியே காவிரி பிரச்சினையில் வெற்றி கண்டவர். முதல்வர் அம்மா அரசு ஊழியர் களுக்கு போனஸ் அறிவித்து இருக்கி றார்.
அம்மா எங்கிருந் தாலும் மக்கள் பணியை செவ்வனே செய்யக் கூடி யவர். உள்ளாட்சி தேர் தலில் வேட்பாளர்களை அறிவித்தது மட்டுமன்றி பிரசார பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க் கட்சியினர் வீண் வதந்தியை பரப்புகின்றனர்.
அதை யாரும் நம்ப வேண்டாம். தேவையற்ற வதந்தி பரப்பு வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஒரு சில தினங்களில் அம்மா பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.