சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் தேறி மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன்.அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்! என்று பதிவிட்டுள்ளார்