சென்னை:
தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ரயில்வே வாரிய தலைவரிடம் மனு அளித்துள்ளார்.
அதி நவீன வசதிகளை கொண்ட தேஜஸ் ரயிலானது இதற்கு முன்பு மும்பைக்கும் கோவாவிற்கும் இடையே இயக்கப்பட்டு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய ரயில்வேத்துறை தேஜஸ் சொகுசு விரைவு ரயிலை சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்க முடிவெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தேஜா சொகுசு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் இந்த ரயிலில், வைபை, ஏசி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப் பட்டுள்ளது. சுமார் 7 மணி நேரத்தில் மதுரையை சென்றடையும் வகையில் அதிவேக ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.
காலை 6 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் மதியம் 1 மணிக்கு மதுரையை சென்றடையும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னையை வந்தடையும்.
இந்த தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் என்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டால் இடையில் ஒரு சில இடங்களை தவிர வேறு எங்கும் நிற்காது. இந்த நிலையில், ‘தேஜா எக்ஸ்பிரஸ்’ விரைவு ரயில், பயணிகளின் தேவையையொட்டி தாம்பரம் டெர்மினலில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகளின் கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் இந்திய ரயில்வே வாரியத் தலைவரிடம் மனு அளித்துள்ளார்.