சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசுகிறார்.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, சட்டப்பேரவையில் ஜெ. உருவப்படம் திறப்பு போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்து கட்டண உயர்வு குறித்து, திமுக அமைத்த 5 பேர் கொண்ட  ஆய்வு குழுவின் அறிக்கையை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த ஆய்வறிக்கையை முதல்வரிடம் சர்ப்பிக்க மு.க.ஸ்டாலின் சார்பாக நேரம் கேட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்கு ஒதுக்கப்பட்டு நேரமான பகல் 12 மணி அளவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளார். அப்போது,  போக்குவரத்து கழக மேம்பாடு தொடர்பான திமுக ஆய்வறிக்கையை  அவர் முதல்வரிடம் ஒப்படைத்து பேருந்து கட்ட உயர்வை மறுபரிசீலனை செய்ய கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.