திமுகவில் இணைந்த மக்கள் தேமுகவினரை தனது பாணியில் நோஸ்கட் செய்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து சந்திர குமார் உள்ளிட்டோர் தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
பிறகு சந்திரகுமார் தலைமை யில் தேமுதிக அதிருப்தியாளர்கள் இணைந்து மக்கள் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினர். திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.
இந்த நிலையில், மக்கள் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் நடந்தது. இதில் ‘”திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடக்க மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைப்பது” என்று தீர்மானம் நிறைவேற்றினர். அதே போல் இணைந்தனர்.
இதை “மக்கள் தே.மு.தி.கழகம், தி.மு.கவில் இணைந்தது” என்று சொல்லாமல், “மக்கள் தேமுதிக கட்சியைச் சேர்ந்த திரு. சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் இன்று தங்களை திமு கழகத்தில் இணைத்து கொண்டனர்” என்று சிம்பிளாக அறிவித்துவிட்டார் கருணாநிதி.
“பெரிய அளவில் தே.மு.தி.கவில் இருந்து தொண்டர்களை அழைத்துவருவார்கள் என்று தி.மு.க. தரப்பு எதிர்பார்த்தது. ஆனால் மிகச் சிலரே சந்திரகுமார் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர். ஆகவேதான் அவர்களது “கட்சி” அங்கீகாரம் தர கருணாநிதி விரும்பாமல் நோஸ்கட் செய்துவிட்டார்” என்று பேசப்படுகிறது.