சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார்.
கொரோனா பாதிப்புக்குள்ளான எச்.வசந்தகுமார் எம்.பி. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், தி.மு.க தலைவர் முக ஸ்டாலின், வசந்தகுமார் உடல்நிலை குறித்து, அவரது குடும்பத்தினரிடம் விசாரித்ததாக தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவில், #COVID19 பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் @INCTamilNadu -வின் முன்னணித் தலைவர் அன்புச் சகோதரர் @vasanthakumarH MP அவர்களுடைய புதல்வர் & குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் விசாரித்தேன். அவர் விரைவில் முழுமையான உடல்நலன்பெற்று மக்கள் பணியைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.