திருச்சி: டாஸ்மாக் சாராயக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் என்னை திமுகவினர் வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனர் திருச்சி  விவசாய சங்க தலைவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். விவசாய சங்க தலைவரின் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் சோம்பரசன் பேட்டையில் FL2 வகை மதுபான கடை திறக்க அரசு முயற்சித்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து,  தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.பா சின்னதுரை தலைமையில் சமூக ஆர்வலர்கள்  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாசலில் போராட்டம் நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்டம் சோம்பரசன் பேட்டையில் FL2 வகை மதுபான கடை  கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் அந்த கடையை திறக்க முயற்சித்து வந்தனர்.  அதன்காரணமாக புகாரை வாபஸ் பெற விவசாய சங்க தலைவர் உள்பட சமூக ஆர்வலர்களை சந்தித்து பேசினர். பின்னர் திமுக மேலிடத்தின் அழுத்தம் காரணமாக, மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை மாவட்ட ஆட்சியர் மீண்டும் திறக்க உத்தரவிட்டார்.

இதனை கண்டித்து அந்த மதுபான கடையை மூடப்பட வேண்டும், தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய வழியில் தண்ணீர் அருந்தா உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர்  திருச்சியைச் சேர்ந்த மா.பா சின்னதுரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது போராட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க தலைவர், மா.பா சின்னதுரை , கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதல் அமைச்சர் ஆண்டுதோறும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் 2026-க்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த வாக்குறுதிகளை மறந்து மது, மாது, சூது நடத்தும் வகையில் FL 2 வகையான மனமகிழ் மதுபான கடைகளை திறப்பது கண்டனத்திற்குரியது.

புதிய மதுபானக் கடைகளை திறக்க  எதிர்க்கும் வகையில் செயல்படும் என்னை திமுகவின மிரட்டுகின்றனர்.  சோம்பரசன் பேட்டையில்  உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் வலியுறுத்தி வருவதால், என்னை அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ் மற்றும் காஜாமலை விஜய் ஆகியோர் மிரட்டுகின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், தனது வீட்டுக்கு வந்து உங்களை சரி கட்டி விட்டு வரச் சொன்னார்கள் என்று அவர்கள்  என்னிடமே பேசுகிறார்கள்  என்றும் கூறினார். 

சாராயத்தின் மீது திமுக அரசு  அக்கறை காட்டி நாட்டை கொள்ளை அடிக்க  திட்டமிட்டு விட்டனர்.  எனவே,  இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும், திருச்சி மாவட்டத்தில் FL 2 வகை மதுபான கடை திறக்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியரும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.