சென்னை:
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் துவங்க உள்ளது.

செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது. செப்.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் அதன்படி மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.