சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
80வயதான திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று உடல்பரிசோதனை மேற்கொண்டு வந்தார். தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில், . அவருக்கு திடீரென நேற்று காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது குடும்பத்தின் துரைமுருகனை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரோ, அப்போலோ நிர்வாகமோ இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.