சென்னை:

டல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த  திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், சுமார் ஒரு மாத  சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.  அவரை சந்திக்க திமுக தொண்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் அவதிப்பட்ட திமுக பொதுச்செயலாளர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 28ந்தேதி  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், சுமார் ஒருமாத கால சிகிச்சைக்கு பிறகு, உடல்நலம் தேடி அன்பழகன் வீடு திரும்பி உள்ளார்.  இந்த நிலையில், வீட்டில்   ஓய்வு எடுத்து வரும் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனை சந்திக்க, தொண்டர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று திமுக தலைமை தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.