சென்னை: ஜூன் 1ம் தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக பொதுக்குழு மதுரையில் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், திமுக பொதுக்குழு மதுரையில் ஜூன் 1ந்தேதி நடைபெறும் என திமு பொதுச்செயலாளர் அன்பழகம் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிடிவிப்பில், மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1ம் தேதி காலை 9 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள், தணிக்கைக்குழு அறிக்கைகள் குறித்து திமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
