சென்னை: ஜூன் 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமக  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,  கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும்,  2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், பாஜகவின் அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லா காலக்கட்டங்களிலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம் திமுக. அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பர் என்று கூறியுள்ளார்.

மேலும்,  திமுகவின் தனித்துவம் இதுதான் என்று கூறியவர்,  “நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும்” “தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்!” விடுத்தார்.

மேலும் அமைச்சர்கள் அனைவரும்,  அவர்களது சொந்த மாவட்டத்தில் அதிக நாட்கள் செலவிடுங்கள் என கூறிய முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி, அரசியல் நடத்தும் மத்திய பாஜக அரசுக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும், மக்கள் ஆதரவுடனும் திமுக எதிர்கொள்ளும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும்,  ஜூன் 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும்  திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர், போப் பிரான்சிஸ்க்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரங்கல். அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு போற்றும் நான்காண்டு; தொடரட்டும் இது பல்லாண்டு! என்ற தலைப்பில் 1,244 இடங்களில் கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது.

எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும் மக்கள் ஆதரவுடனும் திமுக எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.