சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், தமிழக மக்களை குளிர்விக்கும் வகையில்  பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைமையில் 12 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்துள்ளது.  திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நிலையில் நேற்று 173 வேட்பாளர்களைக் கொண்ட திமுக வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து, பேசிய ஸ்டாலின், இது வேட்பாளர் பட்டியல் மட்டுமல்ல; வெற்றியாளர் பட்டியல் என்பதை மக்களின் ஆதரவு நிரூபிக்கும்! 234 தொகுதிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞரே வேட்பாளர். களம் காண்போம்; வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார். அண்ணாஅறிவாலயத்தில் இன்று காலை  11 மணி அளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.