சென்னை

ரும் 16 ஆம் தேதி அன்று சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் வரும் 16ஆம் தேதி அன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ந்டைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள்து.  இந்த அறிவிப்பை திமுக பொதுச் செயலாலரான துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 16-08-2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

என்று அறிவிக்கபட்டுள்ளது.