சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவார பயணமாகஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். இதையடுத்து, நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டஉள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இக்கூட்டத்தில் தி.மு.க.வின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.