சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக  நாளை தி.மு.க மாவட்ட செயலாளர்கள்  காணொளி காட்சி மூலம் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் நவம்பர் 4ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விவாதிக்க உள்ளார்.

இதுதொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்ஐஆர் குறித்த விவாதிக்க நாளை தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  காணொளி காட்சி மூலம்   நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் நாளை காலை 10 மணியளவில்  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.