சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இன்று (செப். 9 ஆம் தேதி) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பில், செப்டம்பர் 09 (செவ்வாய் கிழமை) நண்பகல் 12.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருந்ததார்.
அதன்படி, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிக்காட்சி மூலமாக தொடங்கியது. இதில், திமுக முப்பெரும் விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு – உறுப்பினர் சேர்க்கை ஆகிய பொருள்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிலையில், இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.