சென்னை:
சட்டமன்ற கூட்டத்தில் திங்கட்கிழமை முதல் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளது

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். செயல்தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், வரும் 5, 8, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த போட்டி சட்டமன்ற கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. மேட்டூர் அணையை 12ம் தேதி திறக்க வேண்டும். திங்கட்கிழமை முதல் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Patrikai.com official YouTube Channel