சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக திமுக 20ந்தேதி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்திய நிலையில், தேமுக தலைவர் பிரேமலதா திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  நீட் தேர்வு விஷயத்தில் திமுகதான் மாணவர்களை குழப்புகிறது , அதுதான் மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என அதிரடியாக குற்றம் சாட்டி உள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு  செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கபட்டினம் அடுத்த மெய்யூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு கட்சியின் 71 அடி கொடிமரத்தில் கொடியை ஏற்றிவைத்து, கல்வெட்டை திறந்துவைத்தார். பின்னர் பிறந்தநாள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை செய்தார் அங்க தேமுதிகவின் கல்வெட்டை திறந்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கூட்டணி, திமுக, பாஜக என அனைத்து கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

“தேமுதிகவை பொறுத்தவரையில் நீட் தேர்வு தேவையில்லாதது என்பதுதான்.  இதில் தெளிவாக இருக்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில், திமுக மாணவர்களை குழப்புகிறது. இதனால், ஏற்படும் மனக்குழப்பம் காரணமாக மாணவர்கள் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் தற்கொலை என்ற முடிவுக்கு வருவது தவறான செயல். மாணவர்களின் தற்கொலை இதற்கு தீர்வாகது.  இந்த மனநிலையில் இருந்து மாற வேண்டும். மாணவர்களை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நீட் தேர்வு காரணமாக அனிதா என்ற மாணவி உயிரிழந்த போது மயானத்துக்கு நேரில் சென்று முதலில் அஞ்சலி செலுத்தியவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

நீட் தேர்வுக்கு விளக்கு அளிப்பது தொடர்பான முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உள்ளது. குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணி குறித்து  தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  தமிழ்நாட்டில் நடைப்பயணம் புதிதல்ல. நான் வரும்போது கூட சாலையில் பார்த்தேன். ஏராளமான நபர்கள் வேளாங்கண்ணி மாதக்கோயிலுக்கு நடைபயணமாக சென்றுக்கொண்டிருந்தனர் என்று நக்கலாக கூறியவர்,  பாஜக சார்பில் முதன்முறையாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றவர், அவரது நடைபயணத்தின்  தாக்கம், நாடாளுமன்ற தேர்தல் முடிவிலேயே தெரியும் என்றவர், அதேநேரத்தில் அண்ணாமலைக்கு சர்க்கரைநோய் இருந்தாலும்  நடைபயணத்தால் சரியாகிவிடும்” என விமர்சனம் செய்தார்.

தொடர்ந்த பேசியவர், நான் கேட்கிறேன் முப்பதாயிரம் கோடி குற்றச்சாட்டு தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் மீதும் அவரது மகன் மீதும் குற்றச்சாட்டு உள்ளதே அதைப் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதில் அளிக்கிறார்களா?

இங்கு போட்டோ சூட் ஆட்சி தான் நடக்கிறது மனசு ரொம்ப பாதிச்சிருக்கு எனக்கு எல்லோரையும் நேரடியாக சந்தித்து அவங்க குடும்பங்களை பார்க்கும் போது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வருகிறது என்று கூறிய அவர் G SQUARE பற்றி எல்லா இடங்களிலும் ரைட் போய்க் கொண்டிருக்கிறது அதைப்பற்றி யாரும் வாய் திறக்கிறார்களா என்பதை நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.