சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! நடைபெறுகிறது. இந்த நேர்காணலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டது. இதையடுத்து, விருப்பமனு அளித்தவர்களிடம் இன்றுமுதல் நேரகாணல் நடைபெறுகிறது.
அதன்படி, தி.மு.கழகத்தின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் மார்ச் 17 முதல் மார்ச் 22 மாலை வரை நடைபெற இருக்கிறது.
மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த நேர்காணல் மார்ச் 22 மாலை வரை மேற்கொள்ளப்படும் என தி.மு.கழகத் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் நேர்காணல்கள், காலை 9 மணி மற்றும் மாலை 4 மணி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

[youtube-feed feed=1]