சென்னை:

திமுக விவசாய அணிச் செயலாளர் கே.பி.ராமலிங்கம் கட்சியில் இருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.  அவரது நீக்கத்திற்கான காரணம் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகஅரசு அனைத்து கட்சித் தலைவர்களிடமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு தமிழகஅரசிடம் இன்றுதான் பதில் தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாக, திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம் நேற்றே,  ‘கொரோனா பரவியுள்ள இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது அவசியமற்றது’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

திமுக தலைவருக்கு எதிராக, கே.பி.ராமலிங்கம் கருத்து தெரிவித்தது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.