சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயகாந்த், துணை செயலர் சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.